சினிமா செய்திகள்

உற்சாகத்தில், அஜித் ரசிகர்கள் + "||" + In the excitement, Ajith fans

உற்சாகத்தில், அஜித் ரசிகர்கள்

உற்சாகத்தில், அஜித் ரசிகர்கள்
விசுவாசம் படம் பற்றி அறிந்த அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.
அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம், ‘விசுவாசம்’. இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று ‘விசுவாசம்’ படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். “விசுவாசம்” என்ன மாதிரியான கதை?” என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. முந்தைய படங்களை போல் குடும்ப பாசமும், அதிரடியும் கலந்த படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்தநிலையில், சமீபத்தில் படத்தின் டைரக்டர் சிவாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, “விசுவாசம், என்ன மாதிரியான படம்?” என்று கேள்வி எழுப்பினார்கள். “இது, தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம்” என்று டைரக்டர் சிவா பதில் அளித்தார். அதைக்கேட்டு அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.