சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவின்‘பார்ட்டி’ படத்துக்காகசூர்யா–கார்த்தி, சொந்த குரலில் பாடினார்கள் + "||" + Surya-Karthi sang in their own voice

வெங்கட் பிரபுவின்‘பார்ட்டி’ படத்துக்காகசூர்யா–கார்த்தி, சொந்த குரலில் பாடினார்கள்

வெங்கட் பிரபுவின்‘பார்ட்டி’ படத்துக்காகசூர்யா–கார்த்தி, சொந்த குரலில்  பாடினார்கள்
‘பார்ட்டி’ படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘பார்ட்டி.’ இந்த படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் வெங்கட் பிரபு கூறியதாவது:–

‘‘பேச வார்த்தைகளே இல்லை. இந்த அழகான–அன்பான சகோதரர்களின் புகழ், நேரம் மற்றும் அவர்களின் குரல் 

ஆகியவற்றை எங்களுக்கு அளித்தது, எங்கள் குழுவுக்கு பெருமை. இந்த பாடலுக்கு–இந்த கூட்டணிக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு, எங்கள் வணிக கூட்டாளிகளுக்கும் பெருமைதான்.

‘பார்ட்டி’ படம் ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக, ‘பார்ட்டி’ மாறியிருக்கிறது.’’

தொடர்புடைய செய்திகள்

1. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி
சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள் என நடிகை ரகுல் பிரீத்சிங் கூறினார்.
2. சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால்
செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளிவந்தன.