சினிமா செய்திகள்

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல் + "||" + Sandaikozhi-2 at Ayuthapooja Vishal information

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
பெரிய படங்களுக்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கின்றன என்றும், சிறுபட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்றும் புகார் கிளம்பியதால் திரைப்படங்கள் வெளியீட்டை தயாரிப்பாளர்கள் சங்கம் ஒழுங்குபடுத்தி உள்ளது.
படங்களை வெளியிடும் தேதி குறித்து சங்கத்தில் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

விஷாலின் சண்டக்கோழி–2 படத்தை ஆயுத பூஜை நாளான அக்டோபர் 18–ந் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதினர். இதை பட அதிபர்கள் சங்கம் பரிசீலித்து ஆயுத பூஜையில் சண்டக்கோழி–2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.


லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து 2005–ல் வெளியான சண்டக்கோழி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தையும் சண்டக்கோழி–2 என்ற பெயரில் எடுத்து திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராஜ்கிரண், வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதி–திரிஷா நடித்துள்ள 96 படம் பிரச்சினைகளில் சிக்கி மீண்டு திரைக்கு வந்துள்ளது.
2. கீர்த்தி சுரேசை தொடர்ந்து படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கிய விஷால்–லிங்குசாமி
விஷால் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, லிங்குசாமி டைரக்டு செய்து வந்த ‘சண்டக்கோழி–2’ படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார்.
3. கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை சென்ற நடிகர் விஷால்
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நடிகர் விஷால் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.