சினிமா செய்திகள்

“அன்புமணி ராமதாசுடன் விவாதிக்க தயார்” நடிகர் சிம்பு வீடியோ பேச்சு + "||" + Ready to discuss with Anbumani Ramadoss Actor Simbu Video Talk

“அன்புமணி ராமதாசுடன் விவாதிக்க தயார்” நடிகர் சிம்பு வீடியோ பேச்சு

“அன்புமணி ராமதாசுடன் விவாதிக்க தயார்” நடிகர் சிம்பு வீடியோ பேச்சு
“திரைப்பட பிரச்சினைகள் பற்றி அன்புமணி ராமதாசுடன் விவாதிக்க தயார்” என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.
சென்னை,

திரையுலக பிரச்சினைகள் குறித்து நடிகர் சிம்பு வீடியோவில் பேசி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-

நானும், டைரக்டர் வெங்கட்பிரபுவும் சேர்ந்து ஒரு படம் செய்யவேண்டும் என்று நீண்ட நாட்களாக விரும்பினோம். எங்கள் ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. நாங்கள் இருவரும் பணிபுரியும் படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.


‘மாநாடு’ என்றதும் இது அரசியல் படம் என்று கருதவேண்டாம். நானும் அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று நினைக்கவேண்டாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்.

சமீபகாலமாக திரையுலகில் பல பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘பாபா’ படத்தில் இருந்து ‘சர்கார்’ படம் வரை உதாரணமாக குறிப்பிடலாம்.

சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதை பற்றி பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு விவாத மேடைக்கு பேச அழைத்திருக்கிறார். அவருடன் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு சிம்பு கூறியிருக்கிறார்.