சினிமா செய்திகள்

கிருஷ்ணா- பிந்து மாதவியுடன் `கழுகு-2' + "||" + Kalugu-2

கிருஷ்ணா- பிந்து மாதவியுடன் `கழுகு-2'

கிருஷ்ணா- பிந்து மாதவியுடன் `கழுகு-2'
கிருஷ்ணா `கழுகு-2' படத்தில் நடித்து வருகிறார்.
அலிபாபா, கற்றது களவு, பண்டிகை, வல்லினம், யாமிருக்க பயமேன், யட்சன், கழுகு உள்பட பல படங்களில் நடித்த கிருஷ்ணா அடுத்து, `கழுகு-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். காளி வெங்கட், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சத்யசிவா டைரக்டு செய்கிறார்.

`கழுகு-2' படத்தை பற்றி டைரக்டர் சத்யசிவா சொல்கிறார்:-

``பக்கத்து மாநில முதல்-மந்திரி பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுக்குள் விழுந்து விடுகிறது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்த முதல்-மந்திரியையும் ராணுவ வீரர்கள் சல்லடை போட்டு தேடுகிறார்கள். அவர்களுக்கு உதவிய மலை கிராம மக்கள், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வர மறுக்கிறார்கள். அது, செந்நாய்கள் வசிக்கும் பகுதி.

ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக செந்நாய்களை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா வரவழைக்கப்படுகிறார். அவர் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், முதல்-மந்திரியையும் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே இந்த படத்தின் கதை.

செந்நாய்களுடன் கிருஷ்ணா மோதும் படுபயங்கரமான சண்டை காட்சி, மூணார் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது.''