சினிமா செய்திகள்

செக்ரட் கேம்ஸ் வெப்சீரிஸ் 7 முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள்-நடிகை தகவல் + "||" + Anurag Kashyap made me shoot for the nude scene 7 times in Sacred Games, says Kubra Sait

செக்ரட் கேம்ஸ் வெப்சீரிஸ் 7 முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள்-நடிகை தகவல்

செக்ரட் கேம்ஸ்  வெப்சீரிஸ்  7 முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள்-நடிகை தகவல்
செக்ரட் கேம்ஸ் வெப்சீரிசில் என்னை 7 முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள் நடிகை தகவல் வெளியிட்டு உள்ளார்.
மும்பை

மும்பையை கதைக்களமாக வைத்து அனுராக் காஷ்யப், விக்ரமாதித்தியா மோத்வானி இணைந்து இயக்கியுள்ள செக்ரட் கேம்ஸ்  என்ற வெப்சீரிஸ் மொத்தம் 8 மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு மணி நேரம் என்ற கணக்கில், 8 வாரங்களுக்கு இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதன் முதல் எபிசோடே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இளம் நடிகை ஒருவர் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார்.  குப்ரா சேட் என்ற இளம் நடிகை குக்கூ என்ற திருநங்கையாகவும், பாரில் டான்ஸ் ஆடுபவராகவும் நடித்துள்ளார். முதல் எபிசோடிலேயே செக்ஸ் காட்சிகளில் நவாசுதீன் சித்திக்கும், குப்ரா சேட்டும் சகஜமாக விளையாடியுள்ள நிலையில், குப்ரா சேட் நடித்த அந்த ஒரு முழு நிர்வாணக் காட்சிதான், இன்று விவதாபொருளாக மாறி உள்ளது.

திருநங்கையாகவும், நவாசுதீன் சித்திக்கின் காதலியாகவும் நடித்துள்ள  குப்ரா சேட் கூறியதாவது:

“நடிகர்கள் தேர்வுக்கு சென்றபோதே இயக்குநர்கள் அனுராக் காஷ்யப்பும், விக்ரமாதித்திய மோத்வானியும் நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கிறது என்றனர். காட்சிகளை படம் பிடிக்கும்போது உங்களுக்கு தெரியாது, ஆனால் அதை நீங்கள் பார்க்கும்போதுதான் எவ்வளவு அழகாக வந்துள்ளது என்பதை அறிவீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல டீம் கிடைத்துள்ளது என்றனர். இதை கேட்டதும் எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. நிர்வாணக் காட்சியில் நடிப்பது ஒன்றும் பெரிதல்ல என்றேன்.

ஆனால், உண்மையில், படப்பிடிப்பின்போது நான் அழத்தான் முடிந்தது. நான் நிர்வாணமாக இருக்கும் காட்சி 7 முறை படமாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் காட்சி சரியாகவில்லை என்று கூறி மறுமுறை படம்பிடிக்க வேண்டும் என்றபோது எனக்கு அழுகை வந்தது. ஆனாலும், நான் நடிக்க மறுக்கவில்லை. என்னை புரிந்து கொண்ட இயக்குநர் கட்டியணைத்து எனக்கு ஆறுதல் கூறினார்.

ஆனால், உண்மையில் அந்த காட்சி முடிந்ததும் நான் அந்த அறையில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு இருந்த அனைவருமே கைத்தட்டி பாராட்டினார்கள்,நானும் அந்த காட்சியை பார்த்தபோது, உண்மையிலேயே அழகாக இருந்தது. படத்தின் காட்சிகளுக்கு தேவையென்றால், இப்படிப்பட்ட நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது தப்பில்லையே” என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ’கஜா’ புயல் பாதிப்பு : திரையுலக பிரபலங்கள் நிதி உதவி
’கஜா’ புயல் பாதிப்புக்கு திரையுலக பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
2. இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருக்கிறது - நடிகர் சூர்யா
இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது என நடிகர் சூர்யா எழுதி உள்ள கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.
3. கஜா புயல் பாதிப்பு: நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.#GajaCyclone
4. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth