சினிமா செய்திகள்

ஆபாச காட்சிகளுடன் தயாராகும் வெப் தொடர்களில் நடிக்க விரும்பும் நடிகர்-நடிகைகள் + "||" + Actors and actresses want to act in web series

ஆபாச காட்சிகளுடன் தயாராகும் வெப் தொடர்களில் நடிக்க விரும்பும் நடிகர்-நடிகைகள்

ஆபாச காட்சிகளுடன் தயாராகும் வெப் தொடர்களில் நடிக்க விரும்பும் நடிகர்-நடிகைகள்
இந்தியில் வெப் சீரிஸ்கள் அதிகம் தயாராகின்றன. இதற்கு தணிக்கை இல்லை.
இந்தியில் வெப் சீரிஸ்கள் அதிகம் தயாராகின்றன. இதற்கு தணிக்கை இல்லை. கட்டுப்பாடுகள் கிடையாது. இயக்குனர் விரும்புவதை அப்படியே காட்சிப்படுத்தமுடியும். திரைப்படங்கள் எடுத்து தணிக்கை குழு கத்தரியில் சிக்கி அல்லோலப்பட்டு நிற்கும் இயக்குனர்கள் பார்வை இப்போது வெப்சீரிஸ் பக்கம் திரும்பி இருக்கிறது.

பெரிய திரையில் முன்னணி நடிகர்-நடிகைகளாக இருப்பவர்களும் இவற்றில் நடிக்க விரும்புகிறார்கள். அதே நேரம் இந்த வெப்சீரிஸ்கள் படுக்கை அறை ஆபாசங்களை அப்பட்டமாக காட்சிப்படுத்தி கலாசாரத்தை சீரழிக்கின்றன என்ற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. சமீபத்தில் நெட் பிளிக்சில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ், மற்றும் சேகரட் கேம்ஸ் ஆகிய இரண்டு இந்தி வெப் தொடர்களும் ஆபாசங்களை அள்ளி தெளித்துள்ளன.

இவற்றில் ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா, நேகா துபியா, கியாரா அத்வானி ஆகிய முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். கரண் ஜோகர், அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி ஆகிய இயக்குனர்களின் குறும் படங்களே இந்த ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ தொடரில் வந்தன. இதில் கியாரா அத்வானியின் ஆபாச காட்சி பின்னணியில் லதா மங்கேஸ்கரின் புகழ்பெற்ற பாடலை பயன்படுத்தியதை அவரது குடும்பத்தினர் கண்டித்தனர்.

சயீப் அலிகான், நவாஜுதீன் சித்திக், ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘சேக்ரட் கேம்ஸ்’ வெப் தொடரில் நிர்வாண காட்சிகள் தாராளமாக இருக்கின்றன. தமிழிலும் லட்சுமி என்ற ஆபாச குறும்படம் யூடியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக் காதலை இது மையப்படுத்தி இருந்தது. படுக்கை அறை காட்சியை காட்டி இருந்தார்கள். அதிகம் பேர் இதனை பார்த்தனர்.

ஹாலிவுட்டில் இருந்து வரும் ஸ்ட்ராங்கர் திங்க்ஸ், ஹவுஸ் ஆப் கார்ட்ஸ், த பனிஷர், அயன் பிஸ்ட், பிளாஷ் போன்ற வெப்சீரிஸ்கள் உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும் இவற்றில் பெரிய அளவில் ஆபாசம் கிடையாது. மாணவர்களும் இளைஞர்களும் பார்க்கும் வகையில் திகில், நகைச்சுவை, அதிரடி சீரியல்களாகவே அவை வருகின்றன.

ஆனால் இந்தியாவில் தயாராகும் வெப்சீரிஸ்கள் பாலியலை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றன என்றும், இவற்றை வளர விடுவது ஏற்கனவே பாலியல் வன்மங்களில் சிக்கி தவிக்கும் சமூகத்துக்கு பெருங்கேடாகவே முடியும் என்றும் மூத்த தயாரிப்பாளர் ஒருவர் ஆவேசப்பட்டார். இந்த வெப்சீரிஸ்களுக்கு தணிக்கை அவசியம் என்றும் அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...