சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல தமிழ் இயக்குனரை குறிப்பிட்டு டுவிட் + "||" + Sri Reddy to expose a Tamil director

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல தமிழ் இயக்குனரை குறிப்பிட்டு டுவிட்

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல தமிழ் இயக்குனரை குறிப்பிட்டு டுவிட்
நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல தமிழ் இயக்குனரை குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளது தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #SriReddy
ஐதராபாத்

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்துக்கொண்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக இது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அதிலும்,தன்னை பட வாய்ப்புக்காக படுக்கையை  தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பற்றி பல்வேறு தகவல்களை கூறி அதிர்ச்சி அடைய வைத்து உள்ளார்  நடிகை ஸ்ரீ ரெட்டி.

இது பலருக்கு அதிர்ச்சி என இருக்க தற்போது மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி வந்துள்ளது, ஆம், இவர் சர்ச்சையில் பிரபல  தமிழ் இயக்குனர் ஒருவரும் சிக்கியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை இயக்குனர் முருகதாஸ் தான், ஸ்ரீரெட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘என்ன முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் ஞாபகம் உள்ளதா?. நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, அங்கு நிறைய....’ என்று டுவிஸ்ட் வைத்துள்ளார், மேலும் ‘நீங்கள் நல்ல மனிதர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார், எதற்காக இப்படி சொன்னார் என்று தெரியவில்லை, எது எப்படியோ இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.