சினிமா செய்திகள்

சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் இணையத்தில் வைரலானது + "||" + Karenjit Kaur: The Untold Story of Sunny Leone Official Tamil Trailer

சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் இணையத்தில் வைரலானது

சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு  பட டிரெய்லர் இணையத்தில் வைரலானது
சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. #SunnyLeone
மும்பை

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் நடிகை சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் - சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

கரன்ஜித் கவுராக இருந்தவர் ஆபாச பட உலகுக்கு வந்து சன்னி லியோனாக எப்படி மாறினார் என்பது பற்றி அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு நிமிடம் 22 வினாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரில் சன்னி லியோனின் பால்ய காலம் முதல் தற்போதை நிலை வரை காட்டப்படுகிறது. அடுத்த வீட்டு பெண்ணாக இருந்து, பாலிவுட் ஸ்டாரான சன்னி லியோன் என வர்ணிக்கப்படுகிறார் அவர்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களும் ஒன்று தான் என இந்தியாவில் உள்ள மக்கள் நினைக்கிறார்களே என சன்னி லியோனிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சன்னி லியோன், இந்த எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை தைரியம் தான் என்கிறார்.