சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் இஷா கோபிகர் + "||" + Isha Koppikar joins the sets of Sivakarthikeyan's 'SK14'

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் இஷா கோபிகர்

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் இஷா கோபிகர்
சிவகார்த்திகேயன்-ரவிக்குமார் கூட்டணியில் உருவாக இருக்கும் அறிவியல் சார்ந்த படத்தில் நடிகை இஷா கோபிகர் இணையவுள்ளார்.

சென்னை,

வேலைக்காரன் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவா மனசுல சக்தி இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சீமராஜா படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது.

 இதையடுத்து எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமாருடன் இணையவுள்ளார். அறிவியல் சார்ந்த கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார்.

மேலும் முக்கிய வேடங்களில் கருணாகரன், யோகி பாபு, பானுபிரியா நடிக்க தற்போது இஷா கோபிகரும் படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பை இஷா கோபிகர் தனது சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டு உறுதிபடுத்தினார். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.