சினிமா செய்திகள்

300 படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் வினோத் திடீர் மரணம் + "||" + The famous actor Vinod's sudden death

300 படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் வினோத் திடீர் மரணம்

300 படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் வினோத் திடீர் மரணம்
தெலுங்கு பட உலகின் மூத்த நடிகர்களில் ஒருவர், வினோத். இவர், கடந்த சில மாதங்களாக மூளை சம்பந்தப்பட்ட நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
ஐதராபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நடிகர் வினோத் இதற்காக   சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்  நேற்று  அதிகாலை  3 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59.

மரணம் அடைந்த நடிகர் வினோத் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், 300 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏராளமான திரையுலக பிரமுகர்கள், அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.