சினிமா செய்திகள்

‘‘அஜித் வீட்டில்தான் விஜய்யை முதலில் பார்த்தேன்’’ நடிகர் சிவா பேட்டி + "||" + I saw Vijay first on Ajith house Actor Siva interview

‘‘அஜித் வீட்டில்தான் விஜய்யை முதலில் பார்த்தேன்’’ நடிகர் சிவா பேட்டி

‘‘அஜித் வீட்டில்தான் விஜய்யை முதலில் பார்த்தேன்’’ நடிகர் சிவா பேட்டி
விஜய், அஜித்குமார் இருவரும் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர்கள்.
விஜய், அஜித்குமார் ரசிகர்களுக்குள் எப்போதும் ஒரு ‘பாக்ஸ் ஆபீஸ்’ யுத்தம் நடந்துக்கொண்டே இருக்கும். யார் ‘பாக்ஸ் ஆபீஸ் கிங்’ என்ற போட்டி பலமாக இருக்கும். தளபதி, தல என்று ரசிகர்கள் ஆளுக்கொரு யுத்தம் நடத்தும் அளவுக்கு இருவரும் ‘மாஸ்’ கதாநாயகர்கள்.


இதையும் தாண்டி விஜய்யும், அஜித்குமாரும் நல்ல நண்பர்கள் என்பதுதான் உண்மை. அதை இருவருமே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் இதே கருத்தை நடிகர் சிவாவும் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் சிவா அளித்த ஒரு பேட்டியில், ‘‘நான் விஜய் சாரை முதன் முதலாக அஜித் சார் வீட்டில்தான் பார்த்தேன், அந்த அளவுக்கு அவர்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

சிவா நடிப்பில், ‘தமிழ் படம்–2,’ தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.