சினிமா செய்திகள்

சிங்கப்பூர் மியூசியத்தில் அனுஷ்கா சர்மாவுக்கு மெழுகு சிலை + "||" + Wax statue for Anushka Sharma at Singapore Museum

சிங்கப்பூர் மியூசியத்தில் அனுஷ்கா சர்மாவுக்கு மெழுகு சிலை

சிங்கப்பூர் மியூசியத்தில் அனுஷ்கா சர்மாவுக்கு மெழுகு சிலை
கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்துள்ள பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு சிங்கப்பூர் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்படுகிறது.
 அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட இந்தி நடிகர்களுக்கும் அங்கு ஏற்கனவே சிலை உள்ளது. ஆனாலும் எந்த நடிகர்களுக்கும் இல்லாத தனி சிறப்புடன் அனுஷ்கா சர்மா சிலையை அமைக்கின்றனர்.

அதாவது பார்வையாளர்களை பார்த்து பேசுவது போன்று இந்த சிலை அமைய உள்ளது. அனுஷ்கா சர்மா சிலை, அருகில் வரும் பார்வையாளர்களிடம் ‘ஹாய்’ சொல்லும். அவர்களுக்கு வாழ்த்துக்களும் கூறும். இதன்மூலம் அனுஷ்கா சர்மாவுடன் பேசும் அனுபவத்தை பார்வையாளர்கள் பெறலாம் என்று மியூசியம் நிர்வாகிகள் கூறினார்கள்.


சிலையின் கையில் கேமரா வைத்து செல்பி எடுப்பது போல் வடிவமைத்துள்ளனர். அதன் அருகில் நின்றால் அனுஷ்கா சர்மா செல்பி எடுப்பதுபோல் படம்பிடிக்கலாம். அனுஷ்கா சர்மா கையில் இருக்கும் கேமராவை அழுத்தியும் படம் எடுக்கலாம். அனுஷ்கா சர்மா மெழுகு சிலையை உருவாக்கும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் சிலை நிறுவப்படும் என்றும் நிர்வாகிகள் கூறினார்கள்.