சினிமா செய்திகள்

‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்கு, நடிகர் கார்த்தி அறிவுரை + "||" + Actor Karthi advises to 'Bigbass' rivals

‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்கு, நடிகர் கார்த்தி அறிவுரை

‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்கு, நடிகர் கார்த்தி அறிவுரை
தனியார் தொலைக்காட்சி சேனலில் தினமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘பிக்பாஸ்’.
100 நாட்கள் ஒரே வீட்டில் வாழும் பிரபலங்கள் இடையே நடக்கும் சண்டைகள், உரையாடல்கள், மகிழ்ச்சி, அழுகை போன்றவற்றை தொகுத்து இத்தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் வசித்து வரும் வீட்டுக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர் சென்றனர். நடிகர் கார்த்தி, நகைச்சுவை நடிகர் சூரி, டைரக்டர் பாண்டிராஜ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தாளிகளாக சென்றனர். அங்கு அவர்களுடன் நடிகர் கார்த்தி பல மணி நேரம் உற்சாகமாக கலந்துரையாடினார்.


அப்போது, ‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்கு நடிகர்  கார்த்தி  அறிவுரை  வழங்கி  இருக்கிறார். ‘‘எந்த போட்டியாக இருந்தால் என்ன... உங்களுடைய உண்மையான முகத்தை காட்டுங்கள். உண்மையாக சொல்கிறேன்... இங்கே எல்லோருமே நடிக்கிறீர்கள்... அதை மக்களும் பார்க்கிறார்கள். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று நடிகர் கார்த்தி கூறினார்.

அதேபோல் நடிகர் சூரியும் அங்குள்ள போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று மகத் போன்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். டைரக்டர் பாண்டிராஜும், பாலாஜி–நித்யா ஜோடிக்கு அறிவுரை கூறுகிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.