சினிமா செய்திகள்

கதாநாயகிகளுக்கு பாலியல் தொல்லை அரசியல்வாதிகள் மீது ஸ்ரீரெட்டி புகார் + "||" + Sexual harassment for heroines Srireddi complains to politicians

கதாநாயகிகளுக்கு பாலியல் தொல்லை அரசியல்வாதிகள் மீது ஸ்ரீரெட்டி புகார்

கதாநாயகிகளுக்கு பாலியல் தொல்லை அரசியல்வாதிகள் மீது  ஸ்ரீரெட்டி புகார்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார்களால் தெலுங்கு பட உலகம் கலகலத்துப்போய் இருக்கிறது.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார். இப்போது தமிழ் பட உலகினரையும் பாலியல் சர்ச்சையில் இழுத்து இருக்கிறார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். இதனால் தமிழ் பட உலகிலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் கூறியுள்ளார். பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவி உள்ளது.


ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:–

‘‘மதிப்புக்குரிய முதல்–மந்திரி சந்திரசேகரராவ் அவர்களுக்கு தெரிவிப்பது, கதாநாயகிகளை படுக்கையில் பயன்படுத்தியவர்களில் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். நான் அவர்கள் விவரங்களை வெளியிடவில்லை. தேன்கூட்டில் கைவைக்க விரும்பவில்லை. மீறி சொன்னால் அந்த அரசியல்வாதிகள் என்னை கொன்று விடுவார்கள்.

எனக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் பிரச்சினையில் உங்களுக்கு வேண்டியவர்களும் இருக்கிறார்கள். நான் அரசியல் பக்கம் வரவில்லை. ஆனாலும் தெலுங்கு நடிகர்கள் சங்கம் எனக்கு நிறைய தொல்லைகள் கொடுக்கிறது. நீங்கள் தெலுங்கானாவுக்கு தந்தைபோல் இருக்கிறீர்கள். எனது நிலைமை மோசமாக உள்ளது.

பிரச்சினைக்கு முடிவு கட்டி நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள். நான் ஐதராபாத்தில் நுழைய தயவு செய்து தடைவிதித்து விடாதீர்கள். நான் உண்மைகளையே பேசி வருகிறேன்.’’

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உங்கள் ரகசியங்களை வெளியிடுவேன் : நடிகர் ராஜேந்திர பிரசாத்தை மிரட்டிய ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி பட உலகினர் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார். தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக பட்டியலை வெளியிட்டார்.
2. இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி பட உலகில் அதிர்வை ஏற்படுத்தினார்.
3. தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது ஸ்ரீரெட்டி மோசடி புகார்
தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
4. அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை : நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
5. நடிகை ஸ்ரீரெட்டி மீது அவதூறு வழக்கு தொடருவேன்’’ - டைரக்டர் வாராகி பேட்டி
நடிகை ஸ்ரீரெட்டி மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று டைரக்டர் வாராகி பேட்டி அளித்துள்ளார்.