சினிமா செய்திகள்

இந்தி திரைப்பட உலகின் மூத்த நடிகை ரிதா பாதுரி காலமானார் + "||" + Veteran Hindi film actor Rita Bhaduri dies at 62

இந்தி திரைப்பட உலகின் மூத்த நடிகை ரிதா பாதுரி காலமானார்

இந்தி திரைப்பட உலகின் மூத்த நடிகை ரிதா பாதுரி காலமானார்
இந்தி திரைப்பட உலகின் மூத்த நடிகை ரிதா பாதுரி காலமானார்.
மும்பை, 

இந்தி திரைப்பட உலகின் மூத்த நடிகைகளில் ஒருவர் ரிதா பாதுரி. கடந்த சில தினங்களாக சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரிதா பாதுரி, சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை, பின்னிரவு காலமானார். 

அவருக்கு வயது 62. சிறந்த குணச்சித்திர நடிகையான ரிதா பாதுரி, திரைப்படங்களில் மட்டும் அல்லாது பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

 இறுதிச்சடங்குகள் இன்று மாலை மும்பையில் உள்ள அந்தேரியில் நடைபெறுகிறது. இதன்பிறகு, ரிதா பாதுரியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. ரிதா பாதுரியின் மறைவுக்கு இந்தி திரைப்பட உலகினர், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.