சினிமா செய்திகள்

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எனது மகனே வலிமைக்கான அடிப்படை; நடிகை சோனாலி பிந்த்ரே + "||" + Sonali Bendre says son Ranveer a source of strength in her fight against cancer

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எனது மகனே வலிமைக்கான அடிப்படை; நடிகை சோனாலி பிந்த்ரே

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எனது மகனே வலிமைக்கான அடிப்படை; நடிகை சோனாலி பிந்த்ரே
எனது மகன் ரன்வீர் வலிமைக்கான அடிப்படையாக இருக்கிறான் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.
மும்பை,

இந்தி படவுலகில் ஆக் என்ற படம் வழியே நடிகை சோனாலி பிந்த்ரே அறிமுகமானார்.  அவர் தமிழில் பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

அவர் 2004  ஆம் ஆண்டுக்கு பிறகு நடிக்கவில்லை. திரைப்பட இயக்குனரான கோல்டி பெல்லை 2002ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு 12 வயதில்  ஒரு மகன் உள்ளார்.

43 வயதாகும் சோனாலி  தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  இதற்காக  நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சோனாலி தனது இன்ஸ்டாகிராமில் தனது மகன் ரன்வீருடன் உள்ள படம் ஒன்றை பதிவிட்டு, எனது மகன் ரன்வீர் வலிமை மற்றும் நல்ல விசயத்திற்கான அடிப்படையாக இருக்கிறான் என தெரிவித்துள்ளார்.

அவன் 12 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 8 நாட்களுக்கு முன் பிறந்தது எனது மனதில் ஆச்சரியத்தினை நிறைத்தது.  அதில் இருந்து அவனது மகிழ்ச்சி மற்றும் நலம் ஆகியவையே மற்ற எல்லாவற்றையும் விட மைய விசயம் ஆக அமைந்திருந்தது.

அவனிடம் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட பின் அதனை சொல்வதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது.  அவனை பாதுகாக்க நாங்கள் அதிகம் விரும்பினோம்.  அவனிடம் அனைத்து உண்மைகளையும் கூறுவது அவசியம் என அறிந்திருந்தோம்.  எப்பொழுதும் திறந்த மனதுடன் மற்றும் நேர்மையுடனேயே நடந்து கொண்டோம்.  அவன் இந்த விசயத்தினை பக்குவமுடன் எடுத்து கொண்டான்.

எனக்கு வலிமை மற்றும் நல்ல விசயத்திற்கான அடிப்படையாக ஆகி விட்டான்.  அவன் கோடை விடுமுறையில் இருக்கிறான்.  அவனுடன் நான் நேரம் செலவிட்டு வருகிறேன்.  நாங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் வலிமையை பெற்று கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி அடித்துக் கொலை
மூங்கில்துறைப்பட்டு அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் விவசாயியை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
2. வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணம்: கொலையா? போலீஸ் விசாரணை
வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. 31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 11 ஆண்டு ஜெயில் - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
4. தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேர் கைது
ஓசூரில், தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், 21 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
5. நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என இரங்கல் செய்தி வெளியிட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ
“நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.