சினிமா செய்திகள்

லண்டனில் காதலருடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா + "||" + Priyanka Chopra with lover in London

லண்டனில் காதலருடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா

லண்டனில் காதலருடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ராவும் அவரது காதலரும் லண்டனில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.
35  வயது  பிரியங்கா  சோப்ராவும்  அமெரிக்காவை  சேர்ந்த 25 வயது பாப் பாடகர் நிக் ஜோனாசும் காதலிக்கின்றனர். ஹாலிவுட்டில் குவாண்டிகா தொடரில் நடித்தபோது நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை வெளிப்படுத்தி உள்ளனர். பொது நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக பங்கேற்கிறார்கள். 

அமெரிக்காவில் நடந்த உறவினர் திருமணத்துக்கு பிரியங்கா சோப்ராவை நிக் ஜோனாஸ் அழைத்து சென்று குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினார். காதலை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் நிக்ஜோனாசை பிரியங்கா சோப்ரா மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்தார். அவர்களும் காதலுக்கு சம்மதம் சொன்னார்கள். 

எனவே விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். திருமணத்தை இந்தியாவில் நடத்துவதா? அல்லது அமெரிக்காவில் நடத்துவதா? என்று ஆலோசிக்கின்றனர். இருவரும் இப்போது லண்டன் சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக சுற்றி வருகிறார்கள். நிக் ஜோனாஸ் பாப் பாடகர் என்பதால் உலக அளவில் பிரபலமாக இருக்கிறார். 

எனவே லண்டனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பிரியங்கா சோப்ராவுடன் சாப்பிட சென்ற அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தனர். பிரியங்கா சோப்ரா இந்தியில் தயாராகும் புதிய படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்குதாக தகவல். வேறு எந்த இந்திய நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை.