சினிமா செய்திகள்

இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி + "||" + tapmas Video in the post  Actress Sri Reddy

இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி

இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி
ஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ளார். #SriReddy
ஐதராபாத்

தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் பட உலகினர் மீது குற்றம் சாட்டி வருகிறார். நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோர் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளனர். 

ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் நானி தன்மீது பாலியல் புகார் கூறியதற்காக ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க தடை விதித்து பிறகு அதை வாபஸ் பெற்றுவிட்டது. 

ஆனாலும் தெலுங்கு பட உலகினர் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் ஒதுக்குகிறார்கள். ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் இப்போது தமிழ் பட உலகினருக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. விஷாலிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன என்றும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறும்போது, ‘‘நடிகை ஸ்ரீரெட்டி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார். ஆதாரம் இல்லாமல் கூறும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

சில உறுப்பினர்கள் அவர் மீது புகார் அளிக்க தயாராகி வருவதாகவும், அதை வைத்து ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இத்தனை நாள் நடிகர்கள் பற்றி தகவல்களை லீக்ஸ் செய்து வந்த ஸ்ரீரெட்டி, அவருடைய பேஸ்புக் பக்கத்தில், இன்று லீக்ஸ் இல்லை என கூறி தமிழில் அவர் டப்மேட்ச் செய்த வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

இதில் '3' படத்தில் ஸ்ருதிஹாசன், தனுஷ்க்கு போன் நம்பர் கொடுக்கும் டயலாக் மற்றும் தனுஷ் அவரை ஃபாலோ செய்து வந்து லவ் பண்ணுறியா..? என கேட்கும் வசனத்தையும் ஒருவருடன் பேசி பதிவிட்டுள்ளார்.