சினிமா செய்திகள்

மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக இரண்டவது முறை வதந்தி + "||" + Mr.Bean Dead Rumor twice

மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக இரண்டவது முறை வதந்தி

மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக இரண்டவது முறை வதந்தி
உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டார் என செய்தி பரவிய நிலையில் அது வதந்தி என தெரியவந்துள்ளது. #Mr_Bean

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர் மிஸ்டர் பீன்  இறந்துவிட்டார் என செய்தி பரவிய நிலையில் அது வதந்தி என தெரியவந்துள்ளது.

மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் நிஜபெயர் ரோவன் அட்கின்சன் ஆகும்.  இந்நிலையில் ரோவன் இறந்துவிட்டார் என நேற்று தகவல் பரவிய நிலையில் பின்னர் அது வதந்தி என தெரியவந்தது. ஏன் இது போன்ற வதந்தியை விஷமிகள் பரப்பினார்கள் என்பதற்கான காரணம் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

அதாவது, ஒரு போலியான இணையதளம் இவர் இறந்துவிட்டதாக பதிவிட்டு அதன் மூலம் சில ஆபத்தான வைரஸ்களை பரப்பிவிட்டுள்ளனர். இதன்மூலம் லட்சக்கணக்கான கணினிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 63 வயதாகும் ரோவன் இறந்துவிட்டார் என செய்தி பரவுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.