சினிமா செய்திகள்

தமிழ், தெலுங்கு பட உலகினர் மீது பாலியல் புகார்:‘‘வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன்’’ –நடிகை ஸ்ரீரெட்டி + "||" + I will release video sources - actress Sri Reddy

தமிழ், தெலுங்கு பட உலகினர் மீது பாலியல் புகார்:‘‘வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன்’’ –நடிகை ஸ்ரீரெட்டி

தமிழ், தெலுங்கு பட உலகினர் மீது பாலியல் புகார்:‘‘வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன்’’ –நடிகை ஸ்ரீரெட்டி
என்னிடம் இருக்கும் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரால் தமிழ், தெலுங்கு பட உலகம் கலக்கத்தில் உள்ளது. பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி படுக்கையில் பயன்படுத்தியவர்கள் பெயர்களை முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தெலுங்கு நடிகர்கள் நானி, விவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் ஆகியோர் இவரது செக்ஸ் புகாரில் சிக்கினர். நடிகர் ராஜசேகர் மீதும் குற்றம்சாட்டினார். 

இப்போது தமிழ் திரையுலகினரை குறிவைத்துள்ளார். நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோரை சர்ச்சையில் இழுத்து இருக்கிறார். இது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீரெட்டியிடம் ரசிகர்கள் முகநூலில் பல்வேறு கேள்விகளை எழுப்பி கலந்துரையாடினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

‘‘பட வாய்ப்பு தருவதாக என்னை படுக்கையில் பயன்படுத்திவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறேன். மற்ற நடிகைகளும் இவர்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த போராட்டம். பிரபலங்கள் அழைத்ததும் ஏன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கப்படுகிறது.  சினிமா என்பது கவர்ச்சி உலகம். அழகையே இங்கு முக்கியமாக பார்க்கிறார்கள். நான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறேன். உணவு, வாடகை மற்றும் வேறு செலவுகளுக்கு பணம் தேவைபடுவதால் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உடன்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன. உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கின்றனர். என்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. போலீசார் விசாரணை நடத்தினால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.