சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராயுடன் மோதலா? –அபிஷேக் பச்சன் விளக்கம் + "||" + Conflict with Aishwarya Rai? Abishik Bachchan explanation

ஐஸ்வர்யா ராயுடன் மோதலா? –அபிஷேக் பச்சன் விளக்கம்

ஐஸ்வர்யா ராயுடன்  மோதலா? –அபிஷேக் பச்சன் விளக்கம்
ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இஐஸ்வர்யா ராய் , அபிஷேக் பச்சன், மோதல்ருக்கிறார்.
ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு 2007–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஐஸ்வர்யாராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று தகவல் பரவியது. அபிஷேக்பச்சன் தாய் ஜெயபாதுரிக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் சகோதரி சுவேதாவுக்கும் ஐஸ்வர்யாராயை பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது.


திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மாமியார் சண்டை காரணமாக மும்பையில் ரூ.21 கோடியில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் கூறினர்.

இந்த நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.

இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ‘‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
திருவரங்குளம் அருகே துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது மரத்தில் கார் மோதியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
2. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா - இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல்
திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா- இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேருக்கு நேர் கோஷம் எழுப்பியதால் மோதல் ஏற்பட்டு பரபரப்பு உண்டானது.
3. ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பதில்: அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்; 4 பேர் படுகாயம் - கொடிக்கம்பம் உடைப்பு-போலீஸ் குவிப்பு
ஆண்டிப்பட்டி அருகே ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பதில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அ.தி.மு.க. கொடிக்கம்பம் உடைக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
4. ‘பிரிக்ஸிட்’ விவகாரத்தில் மோதல் - இங்கிலாந்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
பிரிக்ஸிட் விவகாரத்தில் மோதல் தொடர்பாக, இங்கிலாந்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார்.
5. ராசிபுரம் அருகே லாரிகள் மோதல்; டிரைவர், கிளனர் பலி
ராசிபுரம் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர், கிளனர் பலியாகினர்.