சினிமா செய்திகள்

கேரள அரசு விருது விழாவில் நடிகர் மோகன்லால் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கவில்லை பிரகாஷ்ராஜ் மறுப்பு + "||" + Prakash Raj, Santhosh Thundiyil denies signing memorandum to stop actor Mohanlal from attending Kerala Film Award ceremony

கேரள அரசு விருது விழாவில் நடிகர் மோகன்லால் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கவில்லை பிரகாஷ்ராஜ் மறுப்பு

கேரள அரசு விருது விழாவில் நடிகர்  மோகன்லால் கலந்து கொள்ள எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை பிரகாஷ்ராஜ் மறுப்பு
கேரள அரசு விருது விழாவில் நடிகர் மோகன்லால் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெத்திடவில்லை என பிரகாஷ்ராஜ் மறுத்து உள்ளார். #PrakashRaj #Mohanlal
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து மலையாள நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார்கள். 

நடிகைகள் ரேவதி, பத்மபிரியா உள்ளிட்ட நடிகைகள் மோகன்லால் முடிவை விமர்சித்து கடிதம் அனுப்பினார்கள். மஞ்சுவாரியர் தலைமையில் செயல்படும் பெண்கள் சினிமா கூட்டுக்குழுவும் கண்டித்தது. இந்த நிலையில் கேரள அரசு சார்பில் சிறந்த மலையாள சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு 8–ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மோகன்லாலை அரசு அழைத்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த நடிகர்– நடிகைகள் உள்பட 107 பேர் கையெழுத்திட்டு கேரள முதல்–மந்திரி பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். 

அதில் திரைப்பட விருது விழாவில் விருது அளிக்கும் முதல்வரும் விருதை வாங்கும் கலைஞர்களும் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக இருக்க முடியும். மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கூடாது என்று வற்புறுத்தி உள்ளனர். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

இந்த மனுவில் எழுத்தாளர் என்.எஸ்.மாதவன், இயக்குனர்கள் ராஜீவ் ரவி, டாக்டர் பிஜூ, சித்தார்த் சிவா,விது வின்சென்ட், கேமிராமேன் சந்தோஷ் துண்டியில், நடிகைகள் கீது மோகன் தாஸ், ரீமா கல்லிங்கல் உள்பட பலர் கையெழுத்திட்டு உள்ளனர் எனதகவல் வெளியாகியது

இந்த கடிதத்தில் நடிகர் பிரக்காஷ்ராஜ் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் இதனை பிரகாஷ்ராஜ் மறுத்து உள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ள வீடியோவில், 

கேரளா மாநில விருது விழாவில் கலந்துகொள்ளும் மோகன்லால் ஜிக்கு எதிரான  கடிதத்தில்  நான் கையெழுத்திட்டுள்ளேன் என கூறப்படுவது தவறு  எந்தவொரு கடிதத்திலும் நான் கையெழுத்திடவில்லை, அல்லது அத்தகைய குறிப்புகளை நான் அறிந்திருக்கிறேன்.

நான் அம்மா நடிகர்கள் சங்கம் எடுத்த முடிவில் மாறுபடுகிறேன். அதில் நான் எனது தெளிவான முடிவை கூறி இருந்தேன். என கூறி உள்ளார்.

இதுபோல் கேமிராமேன் சந்தோஷ் துண்டியிலும் தான் கையெழுத்திடவில்லை என மறுத்து உள்ளார்.