சினிமா செய்திகள்

விளம்பர பட ஒரு நாள் சம்பளம் ரன்பீர் கபூருக்கு ரூ.6 கோடி + "||" + Ranbir Kapoor's One-day salary for Rs 6 crore at advertisement film

விளம்பர பட ஒரு நாள் சம்பளம் ரன்பீர் கபூருக்கு ரூ.6 கோடி

விளம்பர பட ஒரு நாள் சம்பளம் ரன்பீர்  கபூருக்கு  ரூ.6 கோடி
இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ரன்பீர் கபூர், 2007–ல் வெளியான ‘சாவரியா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மளமளவென வளர்ந்து பெரிய நடிகர்களுக்கு இணையாக உயர்ந்தார்.
ரன்பீர் கபூர்  நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

சமீபத்தில் சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சஞ்சு’ என்ற பெயரில் வெளியான படத்தில் சஞ்சய்தத் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் நிகழ்த்தியது.  இந்த படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. இதனால் விளம்பர படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கிறார்.

பெயிண்ட், குளிர்பானங்கள், டி.வி, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் விளம்பரங்களில் ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். இவற்றுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.3 கோடியில் இருந்து 3.5 கோடிவரை வாங்கினார். 

சஞ்சு பட வெற்றிக்கு பிறகு விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ.6 கோடி நிர்ணயித்து உள்ளார். அந்த தொகையை கொடுக்க விளம்பர நிறுவனங்களும் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரன்பீர் கபூருக்கு இந்தியில் இப்போது 3 படங்கள் கைவசம் உள்ளன. கத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா ஆகியோருடன் ஜோடியாக நடிக்கிறார்.