சினிமா செய்திகள்

அஜித்குமார் படத்தின் நாயகி புரூனா அப்துல்லாவுக்கு திருமணம் + "||" + Actress Bruna Abdullah Marriage is to be held

அஜித்குமார் படத்தின் நாயகி புரூனா அப்துல்லாவுக்கு திருமணம்

அஜித்குமார் படத்தின் நாயகி புரூனா  அப்துல்லாவுக்கு திருமணம்
அஜித்குமாருடன் பில்லா–2 படத்தில் பார்வதி ஓமனகுட்டனோடு சேர்ந்து இன்னொரு கதாநாயகியாக நடித்தவர் புரூனா அப்துல்லா.
இந்தியில் ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கிராண்ட் மஸ்தி, ஜெய்ஹோ உள்ளிட்ட படங்களிலும் வந்தார். டி.வி தொடர்களிலும் நடிக்கிறார். புரூனா அப்துல்லாவும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அல் என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.


வெளிநாடுகளில் ஜோடியாகவும் சுற்றினார்கள். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதியில் புரூனா அப்துல்லாவும் காதலரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். காதலர் முட்டி போட்டு நின்று காதலை சொல்லி தனது கையில் இருக்கும் மோதிரத்தை புரூனாவுக்கு அணிவித்தார். மகிழ்ச்சியில் புரூனா முகத்தை பொத்தி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

நிச்சயதார்த்தம் நடந்த இந்த வீடியோவை புரூனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘இன்று எனது வாழ்க்கையில் சிறந்த நாள். இந்த மனிதரை நான் திருமணம் செய்து கொள்கிறேன். என்னை அவர் இளவரசி மாதிரி பார்த்துக் கொள்வார். இந்த உலகின் அதிர்ஷ்டமான பெண்ணாக என்னை உணர்கிறேன். இந்த வியப்பான நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது’’ என்று பதிவு செய்துள்ளார்.