சினிமா செய்திகள்

பிரதமருக்கு பாராட்டு : அரசியலுக்கு வரும் கங்கனா ரணாவத் + "||" + Praise to the Prime Minister: Ganga Ranawat comes to politics

பிரதமருக்கு பாராட்டு : அரசியலுக்கு வரும் கங்கனா ரணாவத்

பிரதமருக்கு பாராட்டு : அரசியலுக்கு வரும் கங்கனா ரணாவத்
தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சமீபத்தில் ஹிருத்திக் ரோ‌ஷனுக்கும் கங்கனா ரணாவத்துக்கும் ஏற்பட்ட மோதல் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லி வக்கீல் நோட்டீசும் அனுப்பினார்கள்.

இருவரும் ஏற்கனவே காதலித்து பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தகராறில் ஈடுபடுவதாக பேசப்பட்டது. மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார்.

கங்கனா ரணாவத் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியில் அவர் சேருவார் என்று இந்தி பட உலகில் பேசுகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்து கங்கனா ரணாவத் பேசியதாவது:–

‘‘பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தின் சிறந்த தலைவராக திகழ்கிறார். அவர் சாதாரணமாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. பெற்றோர்கள் உதவி இல்லாமல் கடினமாக உழைத்து பிரதமர் பதவிக்கு உயர்ந்து இருக்கிறார். மோசமான நிலையில் இருந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார். நாட்டை முன்னேற்ற அவருக்கு 5 ஆண்டுகள் போதாது. எனவே அடுத்த 2019–ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும்.’’

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.