சினிமா செய்திகள்

முத்த காட்சி : கமல் பாணியில் தனுஷ் + "||" + kissing scene: Dhanush in Kamal style

முத்த காட்சி : கமல் பாணியில் தனுஷ்

முத்த காட்சி :  கமல் பாணியில் தனுஷ்
முத்த காட்சியில் கமல்ஹாசன் பாணியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் தனுஷ்.
வடசென்னை படத்தில் இந்த முத்த காட்சி இடம்பெற்று உள்ளது. வெற்றி மாறன் இயக்கி உள்ளார். வடசென்னை மக்களின் முந்தைய காலத்து வாழ்க்கை முறையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

இதில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் தனுஷ் வடசென்னை இளைஞராகவே தன்னை உருமாற்றி இருந்தார். ‘ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா’ இது என்று அவர் ஆவேசமாக பேசும் வசனம் ஆக்ரோ‌ஷமான அதிரடி சண்டை படம் என்பதை  உணர்த்தியது.


போலீஸ் கலவரத்தில், ‘திருப்பி அடிக்கைலைன்னா இவங்க நம்மள அடிச்சி ஓட விட்டுட்டே இருப்பாங்க’ என்ற சர்ச்சை வசனமும் இருந்தது. இதற்கும் மேலாக தனுசும் ஐஸ்வர்யா ராஜேசும் உதட்டுடன் உதடு முத்தமிடும் காட்சி அமைந்து இருந்தது. கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்ற முத்த காட்சிகளை மிஞ்சும் வகையில் இதை படமாக்கி இருந்தனர்.

 இந்த படம் குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘வடசென்னை எனது கனவு படம். அனைவரின் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்கள்தான் எனது பலம்’’ என்று கூறியுள்ளார்.