சினிமா செய்திகள்

நடிக்க விரும்பும் மதுபாலா மகள்கள் + "||" + Madhubala daughters who want to act

நடிக்க விரும்பும் மதுபாலா மகள்கள்

நடிக்க விரும்பும் மதுபாலா மகள்கள்
நடிக்க விரும்பும் மதுபாலா மகள்கள்
திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் மூழ்கிய முன்னாள் கதாநாயகிகள் தங்கள் மகள்களை நடிகைகளாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ராதாவின் மகள் கார்த்திகா, கோ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இன்னொரு மகளான துளசி கடல், யான் படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி தடக் இந்தி படத்தில் கதாநாயகியாகி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு மகளான குஷியும் நடிகையாகும் ஆசையில் மாடலிங், நடிப்பு பயிற்சி என்று இருக்கிறார். லிசி மகள் கல்யாணி தெலுங்கு படங்களில் நடிக்கிறார். விரைவில் தமிழுக்கு வரவும் கதை கேட்டு வருகிறார். ஜீவிதா மகள் ஷிவானி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

முன்னாள் கதாநாயகி மதுபாலா மகள்களும் நடிகைகளாகிறார்கள். மதுபாலா 1990-களில் தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ரோஜா படம் பெரிய வெற்றி பெற்றது. அழகன், ஜென்டில்மேன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தி பட உலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

மதுபாலாவுக்கும் ஆனந்த்ஷா என்பவருக்கும் 1999-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 18 வயதில் அமியா என்ற மகளும் 16 வயதில் கெய்யா என்ற மகளும் உள்ளனர். இரண்டு மகள்களும் நடிக்க விரும்புவதாகவும் பெரிய இயக்குனர்கள் படங்களில் அவர்களை அறிமுகப்படுத்த மதுபாலா முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மகள்களுடன் இருக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டு இருக்கிறார்.