சினிமா செய்திகள்

மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா + "||" + Priyanka Chopra is back in Hollywood

மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா

மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சல்மான்கான்–பிரியங்கா சோப்ராவை ஜோடியாக வைத்து ‘பாரத்’ என்ற இந்தி படம் தயாராவதாக அறிவித்தனர். இந்த படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.13 கோடி சம்பளம் பேசி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். 

பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசும் காதலிக்கின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. இதற்காகவே சல்மான்கான் படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது. 

பிரியங்கா சோப்ராவை படக்குழுவினர் கண்டித்தனர். அவருக்கு பதில் கத்ரினா கைப்பை தேர்வு செய்துள்ளனர். கத்ரினாவை வரவேற்று சல்மான்கானும் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவை புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். 

இந்த படத்தில் நடிப்பதற்காகவே அவர் பாரத் படத்தில் இருந்து விலகியது தெரிய வந்துள்ளது. பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஹாலிவுட் படத்துக்கு ‘ஹவ்பாய் நிஞ்சா விக்கிங்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகனாக கிறிஸ் பிராட் நடிக்கிறார். இவர் ஜூராசிக் வேல்ட், த கார்டியன் ஆப் த கேலக்ஸி, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பிரியங்கா சோப்ரா ஏற்கனவே ‘எ கிட் லைக் ஜேக்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பதிவாகும் பிரியங்கா சோப்ரா திருமணம்
நடிகை பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனாசும் தங்களது திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.