சினிமா செய்திகள்

‘‘சினிமாவில் ஆணாதிக்கம்’’ –நடிகை மியா ஜார்ஜ் + "||" + cinema Patriarchy - actress Mia George

‘‘சினிமாவில் ஆணாதிக்கம்’’ –நடிகை மியா ஜார்ஜ்

‘‘சினிமாவில் ஆணாதிக்கம்’’ –நடிகை மியா ஜார்ஜ்
சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது என்று நடிகை மியா ஜார்ஜ் கூறியுள்ளார்.
‘அமர காவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் நடித்து பிரபலமானவர் மியா ஜார்ஜ். வெற்றிவேல் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். தினேசுடன் ‘ஒரு நாள் கூத்து,’ விஷ்ணுவுடன் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது:–

‘‘பெண்களுக்கு சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்கள் வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ வேண்டி இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் தொல்லைகளை சந்திக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.  

நடிகையாவதை சிலர் விரும்புவது இல்லை. அப்படிப்பட்டவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அதன் பிறகு நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். பெண்கள் விருப்பங்களுக்கு யாரும் தடை விதிக்க கூடாது. மலையாள பட உலகில் பெண்களுக்காக தனி அமைப்பை உருவாக்கி உள்ளனர். எல்லா அமைப்புகளுமே நல்லது செய்யத்தான் இருக்கின்றன. 

நான் மலையாள நடிகர் சங்கத்தில்தான் உறுப்பினராக இருக்கிறேன். சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது. திரைப்பட தொழில் சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சினிமா வியாபாரம் கதாநாயகர்களை சார்ந்துதான் நடக்கிறது.’’

இவ்வாறு மியா ஜார்ஜ் கூறினார்.