சினிமா செய்திகள்

விஜய் வெளிநாடு பயணம் + "||" + Vijay travel abroad

விஜய் வெளிநாடு பயணம்

விஜய் வெளிநாடு பயணம்
நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.
விஜய்–முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘சர்கார்’ படம், தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசியலில் பல பிரச்சினைகள் உள்ளன.

இந்த நேரத்தில், ‘சர்கார்’ படமும் அரசியல் பற்றிய படமாக வெளிவர இருக்கிறது. இப்படிப்பட்ட கதைக்களத்தில் படம் வெளியானால் கண்டிப்பாக வெற்றியடையும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.

அடுத்தகட்டமாக ‘சர்கார்’ படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள். ஷோபி நடனம் அமைக்க, பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

விஜய்யுடன், வரலட்சுமியும் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார்.