சினிமா செய்திகள்

நகைச்சுவை -திகிலுடன்குரு சோமசுந்தரத்தின் ‘ஓடு ராஜா ஓடு’ + "||" + Guru Somasundaram's odu raja odu

நகைச்சுவை -திகிலுடன்குரு சோமசுந்தரத்தின் ‘ஓடு ராஜா ஓடு’

நகைச்சுவை -திகிலுடன்குரு சோமசுந்தரத்தின் ‘ஓடு ராஜா ஓடு’
‘ஜோக்கர்’ படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் கதை நாயகனாக நடிக்க, ‘ஓடு ராஜா ஓடு’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில், ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பது கதை. ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்கள். படத்தை பற்றி இருவரும் கூறியதாவது:-

“இது ஒரு நகைச்சுவை-திகில் படம். செல்லும் இடமெல்லாம் கதாநாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்கிற திரைக்கதை, இது. ‘ஜோக்கர்’ பட கதாநாயகன் குரு சோமசுந்தரம், நாசர், லட்சுமி பிரியா ஆகியோருடன் பல புது முகங்கள் நடித்து இருக்கிறார்கள். திரைக்கதை அமைத்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார், நிஷாந்த் ரவீந்திரன். தோஷ் நந்தா இசையமைக்கிறார். விஜய் மூலன் தயாரித்துள்ளார். ‘இரும்புத்திரை’ படத்தை அடுத்து பி.டி.செல்வகுமார் வெளியிடும் படம், இது.

இந்த படத்தை அடுத்து மாதவன் நடிப்பில், மிக பிரமாண்டமான ஒரு படத்தை தயாரிக்க விஜய் மூலன் திட்டமிட்டு இருக்கிறார்.