சினிமா செய்திகள்

‘பேரன்பு’ மிகுந்த மம்முட்டியும், புதிரான அஞ்சலியும்...! + "||" + Mammootty and Anjali ...

‘பேரன்பு’ மிகுந்த மம்முட்டியும், புதிரான அஞ்சலியும்...!

‘பேரன்பு’ மிகுந்த மம்முட்டியும், புதிரான அஞ்சலியும்...!
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை தொடர்ந்து ராம் டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘பேரன்பு.’ படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
‘பேரன்பு’ படம் பற்றி டைரக்டர் ராம் கூறுகிறார்:-

“இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.” 


தொடர்புடைய செய்திகள்

1. 2-ம் ஆண்டு நினைவுநாள்: கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார்
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
3. மம்முட்டி வில்லனாக நடிப்பாரா?
ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்தசாமி வில்லனாகவும் நடித்து, மோகன்ராஜா டைரக்டு செய்த படம் ‘தனி ஒருவன்’
4. திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
5. வாஜ்பாயின் அஸ்தி தமிழக தலைவர்களிடம் ஒப்படைப்பு; கமலாலயத்தில் 2 நாள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
தமிழக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் 2 நாள் வைக்கப்படும்.