சினிமா செய்திகள்

‘எம்.எல்.ஏ. சீட்’ ஒரு கேடா? நகைச்சுவை நடிகர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் + "||" + On the comedian actor Sri reddy harassment

‘எம்.எல்.ஏ. சீட்’ ஒரு கேடா? நகைச்சுவை நடிகர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்

‘எம்.எல்.ஏ. சீட்’ ஒரு கேடா? நகைச்சுவை நடிகர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியும் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தியும் இந்திய திரை உலகை பரபரக்க வைத்தார். பின்னர் சென்னை வந்து தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் பாலியல் புகார் கூறினார்.
திரையுலகினரை மிரட்டி பணம் பறிக்க ஸ்ரீரெட்டி முயற்சிப்பதாகவும் அவர் மீது விபசாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டைரக்டர் வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை விலைமாது என்று கூறிய வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி ஸ்ரீரெட்டியும் கமிஷனரிடம் புகார் அளித்தார்.


அதன் பிறகு சிறிது நாட்கள் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிருத்வி மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். பிருத்வி சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். பிருத்வி குறித்து ஸ்ரீரெட்டி முகநூலில் கூறியிருப்பதாவது:-

“பிருத்வி எப்படிப்பட்டவர் பெண்களை எவ்வாறு தவறாக பயன்படுத்தினார் என்பது திரையுலகில் இருக்கும் நடிகைகளுக்கு தெரியும். ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் சாலையில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் அவர் என்ன செய்தார் என்பதை சொல்லவா?. அமெரிக்கா சென்ற நடிகைகளை கேட்டாலும் அவர் கொடுத்த தொல்லைகளை சொல்வார்கள். கிழட்டு நாயே உனக்கு எம்.எல்.ஏ சீட் ஒரு கேடா?’ இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.