சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான் + "||" + Kamal Hassan In the Indian film 2 Ajaytevkan

கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்

கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்
‘விஸ்வரூபம்-2’ படம் திரைக்கு வருவதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இந்தி நடிகர் அஜய்தேவ்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை கமல்ஹாசன் தெரிவித்தார். ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து அஜய்தேவ்கானும் இந்தியன்-2 படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.


கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பில் முழு வீச்சில் கலந்து கொள்கிறார். மற்ற நடிகர்களை வைத்து ஷங்கர் படப்பிடிப்பை முன்கூட்டியே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் முதல் பாகம் லஞ்சத்துக்கு எதிரான கதையம்சத்தில் இருந்தது. இரண்டாம் பாகம் முழுமையான அரசியல் படமாக தயாராகிறது.

கமல்ஹாசன் அரசியலில் குதித்து இருப்பதால் இந்தியன்-2 படம் மூலம் மக்களை தன் கட்சி பக்கம் இழுக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.