சினிமா செய்திகள்

ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா + "||" + Nayantara again with Sivakarthikeyan

ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா

ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா
ராஜேஷ் எம். டைரக்டு செய்யும் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள `சீமராஜா' படம், அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பொன்ராம் டைரக்டு செய்திருக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

இதையடுத்து அவர் 2 புதிய படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அதில் ஒரு படத்தை ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இவர், `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர். இதில், கதாநாயகியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னொரு படத்தை ராஜேஷ் எம். டைரக்டு செய்கிறார். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே `வேலைக்காரன்' படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். இரண்டு பேரும் மீண்டும் இணைய இருக்கும் புதிய படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ராஜேஷ் எம். டைரக்டு செய்கிறார்.

சூரி, சதீஷ், யோகி பாபு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இது, நகைச்சுவை கலந்த காதல் படமாக தயாராகிறது.