சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுடன் நடிகை இஷா குப்தா திருமணம்? + "||" + Actress Isha Gupta marries with cricketer Harikhi Pandya?

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுடன் நடிகை இஷா குப்தா திருமணம்?

கிரிக்கெட் வீரர் ஹர்திக்  பாண்ட்யாவுடன் நடிகை இஷா குப்தா திருமணம்?
கிரிக்கெட் வீரர்களை நடிகைகள் காதலிப்பது சகஜம். சமீபத்தில் விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொண்டனர்.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் காதலில் சிக்கியவர்கள் பட்டியலில் உள்ளனர். சிலருடைய காதல் மட்டுமே திருமணத்தில் முடிகிறது. இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தாவின் காதல் வலையில் விழுந்துள்ளார்.


இவர் ஏற்கனவே இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலிப்பதாக கிசுகிசுத்தனர். அதை இருவருமே மறுத்தார்கள். அதன்பிறகு இந்தி பட உலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் எல்லி அவ்ரமை காதலித்தார். தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா புறப்பட்டுச் சென்றபோது எல்லியும் அவருடன் காரில் விமானநிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன.

பின்னர் இந்த காதலும் முறிந்தது. இப்போது இந்தி நடிகை இஷா குப்தாவை காதலிக்கிறார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். இஷா குப்தா, ராஸ் 3டி, ஹம்சகேல்ஸ், பேபி, ரஸ்டம், பாட்ஷா ஹோ, கமாண்டோ 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா, தமன்னா நடித்து தமிழில் வெளியான தேவி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். பெயரை குறிப்பிடாமல் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று இஷா குப்தா அறிவித்து உள்ளார்.