சினிமா செய்திகள்

தனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம் + "||" + Sonaxi explains that his bungalow is named 'Ramayan'

தனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம்

தனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம்
‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சோனாக்சி சின்ஹா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
சல்மான்கான் ஜோடியாக தபாங் படத்தில் நடித்த சோனாக்சி சின்ஹா தற்போது அதன் மூன்றாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 30–வது படம்.

டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளிலும் சோனாக்சி சின்ஹா பங்கேற்று வருகிறார். மும்பையில் உள்ள சோனாக்சியின் பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்துள்ளனர். டி.வி. நிகழ்ச்சியில் ஒருவர் சோனாக்சியிடம் உங்கள் வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று எதற்காக பெயர் வைத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சோனாக்சி சின்ஹா கூறியதாவது:–


‘‘எனது வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து பலர் என்னிடம் கேட்டு வருகிறார்கள். அதற்கான ரகசியத்தை இங்கே சொல்லப்போகிறேன். எனது வீட்டை பொறுத்தவரை நானும், எனது அம்மாவும் வெளியாட்கள் போலத்தான் இருக்கிறோம். ஏன் என்றால் வீட்டில் உள்ள எனது தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் அனைவருடைய பெயர்களும் ராம், லட்சுமண், பரத் என்றுதான் இருக்கிறது.

எனது தந்தை சத்ருகன். எனது சகோதரர்கள் பெயர் லவ, குசா. எனவேதான் நாங்கள் வசிக்கும் பங்களாவுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்து இருக்கிறோம்.’’

இவ்வாறு சோனாக்சி கூறினார்.