சினிமா செய்திகள்

எதிர்ப்பை மீறி ஸ்ரீரெட்டி ‘கிகி’ நடனம் + "||" + In violation of opposition Srirty 'Kiki' dance

எதிர்ப்பை மீறி ஸ்ரீரெட்டி ‘கிகி’ நடனம்

எதிர்ப்பை மீறி  ஸ்ரீரெட்டி ‘கிகி’ நடனம்
கனடாவை சேர்ந்த பாடகர் டிரேக் வெளியிட்ட கிகி டூ யூ லவ் மீ பாடலுக்கு அமெரிக்காவை சேர்ந்த ஷாகி என்ற நகைச்சுவை நடிகர் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
பல்வேறு பிரபலங்கள் அதை  சவாலாக எடுத்து ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிய வீடியோக்களை வெளியிட்டனர்.

ஹாலிவுட் நடிகர் வில் சுமித்தும் கிகி பாடலுக்கு நடனம் ஆடினார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான இந்த நடனம் இந்தியாவிலும் நுழைந்தது. தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாக இருக்கும் ரெஜினா, கிகி பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டார். இந்தி நடிகைகள் அடா சர்மா, நோரா, நியா, கரிஷ்மா ஆகியோரும் கிகி நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டனர்.


ஓடும் காரில் இருந்து குதித்து ஆடும்போது கீழே விழுந்து கை–கால்களில் அடிபட்டு பலர் காயம் அடைந்தார்கள். இதனால் கிகி நடனத்தை ஆடவேண்டாம் என்று இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் போலீசார் தடை விதித்தனர். மீறி ஆடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்கள்.

ஆனாலும் நடிகை ஸ்ரீரெட்டி எதிர்ப்பை மீறி நடனம் ஆடி உள்ளார். அரை குறை உடையில் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து கிகி நடனம் ஆடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த நடனம் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.