சினிமா செய்திகள்

தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நாளை, கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் + "||" + On behalf of the Tamil film industry Tomorrow in Chennai, Commemoration meeting Karunanidhi

தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நாளை, கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்

தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நாளை, கருணாநிதி நினைவேந்தல்  கூட்டம்
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம், தமிழ் திரையுலகம் சார்பில் நடக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம்  இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான மு.கருணாநிதிக்கு திரையுலகம் ஒன்று சேர்ந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணி முதல், சென்னை அண்ணாசாலை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.