சினிமா செய்திகள்

அவரே வெளியிட்ட புகைப்படம் : இவர்தான் நடிகை பார்வதியின் காதலர்! + "||" + He published a photo: This is the actress Parvathy's Valentine!

அவரே வெளியிட்ட புகைப்படம் : இவர்தான் நடிகை பார்வதியின் காதலர்!

அவரே வெளியிட்ட புகைப்படம் :  இவர்தான்  நடிகை  பார்வதியின்  காதலர்!
அஜித் நடித்த ‘பில்லா–2’ படத்தில் நடித்திருந்தவர், பார்வதி ஓமனக்குட்டன். இவர், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்று, உலக அழகி போட்டியில் இறுதி வரை சென்றவர்.
பார்வதி ஓமனக்குட்டனுக்கும், கேரளாவில் வசிக்கும் ஒரு இளைஞருக்கும் இடையே காதல் இருந்து வருவதாகவும், இரண்டு பேரும் ஜோடியாக சுற்றி வருவதாகவும் ஒரு தகவல் பரவியது.

இதுபற்றி பார்வதி ஓமனக்குட்டனிடம் கேட்டபோது, ‘‘எனக்கும், ஒரு இளைஞருக்கும் காதல் இருப்பது உண்மைதான். என் காதலரின் புகைப்படத்தை சரியான நேரத்தில் வெளியிடுவேன்’’ என்றும் கூறியிருந்தார். அவர் சொன்னபடி, தற்போது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.


அவருடைய காதலரின் பெயர், ரோனக்ஷா. அவரைப் பற்றிய மற்ற விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.

தற்போது பார்வதி ஓமனக்குட்டன் கைவசம் புதிய படங்கள் எதுவும் இல்லை. எனவே அவர் திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும், அதன் அடையாளமே காதலரின் புகைப்பட வெளியீடு என்று மலையாள பட உலகில் பேசப்படுகிறது.