சினிமா செய்திகள்

‘‘கேரளா இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்’’ - சிவகார்த்திகேயன் + "||" + I pray Kerala back to normal - Sivakarthikeyan

‘‘கேரளா இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்’’ - சிவகார்த்திகேயன்

‘‘கேரளா  இயல்பு  நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்’’ - சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகி விட்டவர், சிவகார்த்திகேயன். ஒரு நடுத்தர குடும்பத்தில், சாதாரண பின்னணியில் இருந்து பிரபல நடிகராக உயர்ந்து இருக்கிறார்.
 சமீபத்தில், தென்னிந்தியாவை மிகவும் பாதித்தது, கேரளாவின் மழை–வெள்ள சேதம். அதில் சிக்கி இதுவரை 32 பேர் பலியாகி இருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள அரசுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளும் நிவாரண உதவி தொகையை வழங்கி உள்ளன.


‘‘கேரள மழை–வெள்ள பாதிப்பு என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது’’ என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். தனது உதவிக்கான தொலைபேசி எண்களை அவர் பகிர்ந்துள்ளார்.

‘‘மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லாம் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்து கொள்கிறேன்’’ என்று அவர் கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு கேரளாவிலும் அதிக ரசிகர்-ரசிகைகள் இருக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. “என் மீது சிலருக்கு பொறாமை” -நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ திரைக்கு வருகிறது.
2. நண்பரை டைரக்டராக உயர்த்தி நட்புக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், ‘கனா’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அவருடைய நண்பரான அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய்திருக்கிறார்.