சினிமா செய்திகள்

மதுவுக்கு எதிராக டி.ராஜேந்தர் பாடல் + "||" + D. Rajendar's song against liquor

மதுவுக்கு எதிராக டி.ராஜேந்தர் பாடல்

மதுவுக்கு எதிராக டி.ராஜேந்தர் பாடல்
கபிலன் வைரமுத்து மதுவுக்கு எதிராக உருவாக்கிய தனிப்பாடலை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படி அரசியல் கட்சிகள் ஏற்கனவே போராட்டங்கள் நடத்தி உள்ளன. பல கிராமங்களில் பொதுமக்கள் மதுக்கடைகளுக்கு எதிராக போராடி அவற்றை மூடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்துகிறார்கள். 

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மதுவுக்கு எதிராக ஒரு தனிப்பாடலை உருவாக்கி இருக்கிறார். இந்த பாடலை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார். கடந்த வருடம் வெளியான கவண் திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர்–கபிலன் வைரமுத்து கூட்டணி இந்த தனிப்பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். 

இந்த பாடலுக்கு பாலமுரளி இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் திரைக்கு வந்த கஜினிகாந்த் படத்துக்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் கபிலன் வைரமுத்து எழுதிய பண மதிப்பிழப்பு பாடலை நடிகர் சிம்பு பாடி இருந்தார். அந்த பாடலுக்கும் பாலமுரளிதான் இசையமைத்து இருந்தார். 

மது  கலாசாரத்துக்கு எதிராக டி.ராஜேந்தர் பாடி உள்ள தனிப்பாடலின் தலைப்பு மற்றும் பாடல் வெளியாகும் தேதி போன்ற விவரங்களை கபிலன் குழுவினர் விரைவில் காணொலியாக வெளியிடுகிறார்கள். இந்த பாடலை காட்சிப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.