சினிமா செய்திகள்

ஒரு வருடத்தில் பிரியங்கா சோப்ரா வருமானம் ரூ.77 கோடி + "||" + Priyanka Chopra earns Rs 77 crore a year

ஒரு வருடத்தில் பிரியங்கா சோப்ரா வருமானம் ரூ.77 கோடி

ஒரு வருடத்தில் பிரியங்கா சோப்ரா வருமானம் ரூ.77 கோடி
நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் ரூ.77 கோடி சம்பாதித்து இருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002–ல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது சினிமா பிரவேசம் நடந்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து மளமளவென முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் குவாண்டிகோ டி.வி தொடர்மூலம் ஹாலிவுட்டுக்கு சென்றார். 

இந்த தொடர் அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. 2017–ல் ‘பேவாட்ச்’ ஹாலிவுட் படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. படமும் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் பிரியங்கா நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. 

இப்போது ‘த ஸ்கை ஸ் பிங்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் படமொன்றிலும் ஒப்பதமாகி உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக சல்மான்கான் ஜோடியாக நடிக்கவிருந்த பட வாய்ப்பை உதறி விட்டார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி இருக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. 

இந்த நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா சம்பாதித்த மொத்த வருமானம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்கள், விளம்பர படங்கள், டி.வி தொடர்களில் நடித்தது, ஆடை நிறுவனங்கள், அழகு சாதன போருட்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தது ஆகியவற்றின் மூலம் பிரியங்கா சோப்ரா ரூ.77 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் வரி கழிவுகள் போக ரூ.56 கோடி அவருக்கு கிடைத்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – பாடகர் நிக்ஜோனாஸ்
விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
2. பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் “என் இதயம் உடைந்து விட்டது” -முன்னாள் காதலி வருத்தம்
பிரிங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் இந்திய திரையுலகிலும் அமெரிக்காவிலும் பரபரப்பான பேச்சாக உள்ளது.
3. பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸுக்கு இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம்
பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலரும் பாப் பாடகருமான நிக் ஜோனாஸுக்கும் இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
4. லண்டனில் காதலருடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ராவும் அவரது காதலரும் லண்டனில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.
5. ‘‘எனக்கு விரைவில் திருமணம்’’ –பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.