சினிமா செய்திகள்

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது + "||" + Rani Lakshmibai Ganga Ranawat looks Released

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது

ராணி லட்சுமிபாயாக நடிக்கும்
கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தீபிகா படுகோனே நடிப்பில் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கு வந்த ‘பத்மாவத்’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்ததால் ராணி லட்சுமிபாய் வாழ்க்கையையும் இப்போது படமாக எடுக்கின்றனர். லட்சுமிபாய் பிரபல சுதந்திர போராட்ட வீராங்கணை. ஜான்சியில் ராணியாக இருந்தவர். 

1857–ல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போர் தொடுத்து சுதந்திர போராட்டத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவர் மணிகர்ணிகா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை மணிகர்ணிகா என்ற பெயரில் படமாகிறது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். 

லட்சுமி பாய் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாக படத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. அதையும் மீறி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கிரிஷ் இயக்குகிறார். அடுத்த வருடம் ஜனவரி 25–ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம் இப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, ‘‘எனக்கு இது ஒரு மைல்கல் படம். ராணி லட்சுமிபாயாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்காக வாள் சண்டைகள் கற்றேன். குதிரைசவாரி பயிற்சிகளும் பெற்றேன். 2 நாட்கள் குதிரையிலே சவாரி செய்ததில் காய்ச்சலே வந்துவிட்டது. முழு உழைப்பையும் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கிறேன்’’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
வீடு தரகர் புகார் குறித்து நடிகை கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார்.
2. கபடி வீராங்கனையாக கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து வந்தார்.