சினிமா செய்திகள்

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பிய நடிகை யார் ? + "||" + Jayalalithaa wanted Aishwarya Rai to play her in her biopic

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பிய நடிகை யார் ?

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பிய நடிகை யார் ?
ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படத்தில் நடிக்க தபு, தீபிகா படுகோனே, வித்யாபாலன் பரிசீலனையில் இருந்தாலும், ஜெயலலிதா ஒருவரை தேர்வு செய்து இருந்தார் ஆவர் யார்?
மும்பை

தமிழக முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை குறைத்த திரைப்படம் விரைவில் எடுக்கப்பட உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி சமீபத்தில் இந்த திட்டம் குறித்து தெரிவித்து இருந்தார். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க  தீபிகா படுகோனே, தபு, வித்யா பாலன்,  ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து மிட் டே வெளியிட்டுள்ள தகவலில், 

வித்யாபாலன்  ஏற்கனவே என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றில் - கதாநாயகனின் மனைவி பசவதாரகமாக நடித்து வருகிறார். அதனால் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அவருடன் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.ஆச்சரியமாக, ஐஸ்வரிய ராய் பச்சன் இதுவரை இந்த வேடத்திற்காக அணுகப்படவில்லை. 

1999 ஆம் ஆண்டு சிமி கார்வலின் பேட்டியின் போது ஜெயலலிதா  தனது கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய்  நடிக்க சரியாக இருப்பார் என கூறி இருந்தார் என கூறபட்டு உள்ளது.

இந்தூரி "நாங்கள் ஒரு பாலிவுட் நடிகையை எதிர் பார்க்கிறோம், இது ஒரு தேசிய,  பன்மொழி படம். இந்த கதை இந்தியா முழுவதும் பயணிக்க வேண்டும்.  ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோதிலும்,  அவரது கதையானது உலகளாவிய முறையீடு. நாங்கள் இரண்டு மூன்று சிறந்த பாலிவுட் நடிகைகளை அணுகினோம்.  இயக்குனர் விஜய் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார் என கூறி உள்ளார்.

இந்த படத்தை மதராசாபட்டிணம், தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களை இயக்கிய  விஜய் இயக்கி உள்ளார் என கூறப்படுகிறது.