சினிமா செய்திகள்

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் உதவி + "||" + Actor Vishal Rs 10 lakh for flood damage to Kerala

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் உதவி

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் உதவி
கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கேரளாவில் கனமழை வெள்ளத்தில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 406 கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. 26 ஆயிரத்து 400 ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ள சேத நிவாரண பணிகளுக்கு நடிகர்–நடிகைகள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். 

திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அவரது தாயார் மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவர் அங்கிருந்து படகில் மீட்கப்பட்டார்.

கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ரோகிணி ஆகியோர் நிதி அளித்து உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி வழங்கி உள்ளது. மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் ஆகியோரும் நிதி வழங்கி இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராம்சரண் ஆகியோரும் நிதி வழங்கி உள்ளனர். 

இப்போது மதுரையில் படப்பிடிப்பில் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷாலும் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்து உள்ளார். மேலும் அவர் இயற்கையின் சோதனைகளை சந்தித்து துயரப்பட்டு கொண்டிருக்கும் நமது சகோதரர்களான கேரள மாநில மக்களுக்கு திரைத்துரையினரும் ரசிகர்களும் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.