சினிமா செய்திகள்

பாலா படத்தில் ‘பிக்பாஸ்’ நடிகை! + "||" + Big Boss actress in Bala's film

பாலா படத்தில் ‘பிக்பாஸ்’ நடிகை!

பாலா படத்தில் ‘பிக்பாஸ்’  நடிகை!
டைரக்டர் பாலா படத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா நடிக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், ரைசா. மாடல் அழகியாக வலம் வந்த இவர், ஹரிஸ் கல்யாணுடன் ஜோடியாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதன் மூலம் திரையுலகில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார், ரைசா. 

இதன் விளைவு, தான் இயக்கி வரும் ‘வர்மா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ரைசாவை நடிக்க வைத்திருக்கிறார், டைரக்டர் பாலா. இதனால் சந்தோ‌ஷத்தில் திளைத்திருக்கிறார், ரைசா. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அதேசமயம் லேசான பயமும் இருந்தது. ஆனால் என்னை பொறுமையாகவே பாலா வேலை வாங்கினார். சிறிய வேடம் என்றாலும் மிகவும் அழுத்தமான வேடத்தில் ‘வர்மா’ படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை இருக்கிறது’’, என்றார்.