சினிமா செய்திகள்

விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது + "||" + Vijay movie trailer, Ajith first look Vinayakar is released in Chaturthi

விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது

விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது
விஜய்யின் சர்கார், அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகியவை இந்த ஆண்டின் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்கள். இரண்டு படங்களையுமே தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பட உலகினர் வேலை நிறுத்தத்தால் விஸ்வாசம் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு தீபாவளிக்கு அந்த படம் வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஆனால் சர்கார் படம் தீபாவளிக்கு வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் கதையம்சத்தில் சர்கார் தயாராகிறது. அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கும் விஜய் தேர்தலில் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு வரும்போது அவரது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விடுகிறார் என்றும் இதனால் ஆத்திரமடைந்து அரசியல்வாதிகளுக்கு எதிராக அவர் களம் இறங்குவதுபோன்றும் திரைக்கதை அமைத்து உள்ளனர் என்று தகவல் கசிந்துள்ளது.


சமீபத்தில் அமெரிக்காவில் படமான இந்த படத்தின் பாடல் காட்சி இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை திருடியது யார் என்று ஏ.ஆர்.முருகதாஸ் விசாரணை நடத்துகிறார். இந்த நிலையில் சர்கார் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இதே நாளில் விஸ்வாசம் படத்தில் நடிக்கும் அஜித்குமாரின் முதல் தோற்றமும் வெளியாவதாக கூறப்படுகிறது. இது இருவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் வடசென்னை தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.