கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். #Rajinikanth #Trisha
சென்னை
‘காலா’ படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
அதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக எடுக்கின்றனர். சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக தகவல்.
இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார் என்றும் அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது படத்தில் திரிஷா இருப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்து இருந்தனர். இந்த நிலையில் படத்தில் ரஜினியுடன் திரிஷா இணைய இருப்பதாக தயாரிப்பு நிறுவன சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.திரிஷா இதுவரை ரஜினியுடன் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்று அடிக்கடி கூறி வந்தார். அவரது ஆசை நிறைவேறி உள்ளது.
தனது புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனத்தின் மீது ரூ.71 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.